Menu Close

அதிகாரம் நன்மை தரும் வார்த்தையா?

அதிகாரம் நன்மை தரும் வார்த்தையா?

சக்தி ஆங்கிலத்தில் Power என கூறும் பொது நன்மை தரும் வார்த்தைகளாக வெளிப் படுகின்றன, ஆனால் இதன் தொடர்பாக இன்னும் ஒரு வார்த்தை இருக்கின்றது தமிழில் அதுதான் அதிகாரம்.

ஆகவே அதிகாரம் நன்மை தரும் வார்த்தையா சிந்திப்போம் வாருங்கள்.
அரசியல் வாதிகள் பணக்காரர்கள் பதவியில் இருப்பவர்கள் குடும்பத் தலைவர்கள் போன்றவர்களிடம் அதிகாரம் எதோ ஒரு வகையில் வெளிப்படும்.

அதிகாரம் என்ற ஒரு விடயம் மனிதர்கள் மத்தியில் எல்லா இடங்களிலும் காணப்படும் என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தத்துவஞானி Michel Foucault (1926-1984) கூறுகிறார்.

அப்படி என்றால் இந்த வார்த்தையை நாங்கள் எல்லோரும் நன்றாக விளங்கிக் கொள்ளவேண்டும் ஏன் என்றால், சில மனிதர்கள் அவர்களிடம் இருக்கும் அதிகாரத்தை மறந்து மற்றவர்களிடம் அடிமையாக வாழ்கிறார்கள்.

அதாவது ஒவ்வொரு மனிதருக்கும் அவரது வாழ்க்கை குறித்து அவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கு என்பதை உணரா விட்டால் பின்பு அடிமைகளாகத் தான் வாழ வேண்டும்.

அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களிடம் எப்பவும் நேர்மை இருக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்களிடம் நாங்கள் அடிமையாக வாழத் தேவையில்லை.

அடிமைத் தனத்தில் வாழும் மக்களுக்காக பிரேசில் நாட்டை சேர்ந்த பேராசிரியர் Paulo Freire (1921-1997) உழைத்தார் அதன் தொடர்பாக Empowerment என்ற ஒரு வார்த்தையை அறிமுகப் படுத்தினார்.

Empowerment வார்த்தையின் பொருள் என்னவென்றால் அடிமைத் தனத்தில் வாழும் மக்களது அதிகாரத்தை கொடுப்பதாகும்.

மனித உரிமைகள் இருப்பதை நாம் அறிவோம்  ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிமனித உரிமை இருக்கின்றது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்!

What should we think before we share something on the internet?