Menu Close

யாப்பு

§1. பெயர் மற்றும் இடம்

Stk. 1. அமைப்பின் பெயர் தமிழர் மனை (Tamilshome).

Stk. 2. அமைப்பின் தலைமை அலுவலகம் கொல்ஸ்டப்றோ – டென்மார்க்.

Stk. 3. அமைப்பின் இன்னோர் தலைமை அலுவலகம்; யாழ்ப்பாணம் – இலங்கை.

தமிழர் மனை ஓர் சர்வதேச தன்னார்வ ஆய்வு மற்றும் சேவை அமைப்பு ஆகும்.

§2. நோக்கம்

Stk. 1. அமைப்பின் நோக்கமானது:

உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்களின் சமூகப் பிரச்சினைகளைத் தடுத்தல்.

இலக்குக் குழுவினரின் சமூகப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான ஆய்வுகள் மற்றும் சமூக சேவைகளை முன்னெடுத்தல்.

§3. அங்கத்தவர்கள்

Stk. 1. அமைப்பின் நோக்கத்திற்காக பணியாற்ற விருப்பமும் ஆர்வமும் கொண்ட அனைவரும் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளப் படுவார்கள்.

Stk. 2. அனைத்து அங்கத்தவர்களும் அமைப்பின் நோக்கையும் யாப்பையும் பின்பற்ற வேண்டும்.

Stk. 3. அமைப்பின் நிர்வாகக் குழு உருப்பினர் ஒருவரிடம் அங்கத்தவராக இணைவதற்கு விண்ணப்பிக்கலாம்.

Stl. 4. அமைப்பின் நிர்வாகக் குழு உருப்பினர் ஒருவரிடம் அறிவிப்பதன் மூலம் அமைப்பில் இருந்து விலகிக் கொள்ளலாம்.

  • 3A. அங்கத்துவம் பறிமுதல்

அமைப்பின் ஓர் அங்கத்தவரின் அங்கத்துவம் கீழ்வருமாறு பறிமுதல் செய்யப்படலாம்

ளுவம. 1. நிர்வாகத்திடம் நீக்கம் அறிவிப்பதன் மூலம்.

ளுவம. 2. அமைப்பின் நோக்கம் மற்றும் யாப்பை பின்பற்றவில்லை எனும் சந்தேகம் வரும் நிலையில் நிர்வாகக் குழுவின் ஜனனாயக முடிவின் மூலம்.

§4. பொதுக் கூட்டம்

Stk. 1. பொதுக் கூட்டத்திற்கே அமைப்பின் அதி உயர் அதிகாரம் உள்ளது.

Stk. 2. சாதாரண பொதுக் கூட்டம் வருடத்தில் ஒரு முறை நடைபெறும்.

Stk. 3. அனைத்து அங்கத்தவர்களுக்கும் பொதுக் கூட்டத்தில் கலத்து கொள்ளவும் வாக்களிக்கவும் உரிமை உண்டு.

Stk. 4. சாதாரண பொதுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் குறைந்தபட்சம் இவ் விடையங்கள் இணைக்கப்பட வேண்டும்:

  • கிடைத்த பரிந்துரைகள் கையாளுதல்
  • வரவு செலவு ஏற்றுக்கொள்ளல்
  • ஒருவேளை

§5. அசாதாரண பொதுக் கூட்டம்

Stk. 1. அசாதாரண பொதுக் கூட்டமானது நிர்வாகக் குழு கூட்டம் அவசியமென கருதும் பட்சத்தில் நடத்தப்படலாம். மற்றும் 1ஃ3 பங்கு அங்கத்தவர்களுக்கு மேல் எழுத்து வடிவில் காரணத்துடன் ஓர் கூட்டத்திற்காக விண்ணப்பித்தால் கண்டிப்பாக நடாத்தப்பட வேண்டும்.

§6. பொருளாதாரம் மற்றும் வரவு செலவுக் கணக்கு

ளுவம. 1. அமைப்பின் வரவு செலவுக் கணக்கு நாட்காட்டி ஆண்டின் அடிப்படையில் அமைக்கப்படும்.

ளுவம. 2. பொதுக் கூட்டத்திடம் வரவு செலவுக் கணக்கு மற்றும் திட்டத்தை சமர்ப்பிப்பது நிர்வாகக் குழுவின் கடமையாகும்

§7. சந்தா

Stk. 1. அங்கத்தவர் சந்தா செலுத்தாமல் தமிழர் மனையின் அங்கத்தவராக இருக்க முடியும்.

Stk. 2. அங்கத்தவர்கள் மாதம் 50 அல்லது 100 கிறோணர்களை சந்தாவாக செலுத்தலாம்.

§8. நிர்வாகக் குழு

ளுவம. 1. நிர்வாகக் குழுவில் மொத்தம் 4 உறுப்பினர்கள் உண்டு. அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்புகளும் சம உரிமைகளும் உள்ளன.

§9. யாப்பு மாற்றங்கள்

Stk. 1. இந்த யாப்பை மாற்றுவதானால் பொதுக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டு, அக் கூட்டத்தில் 2ஃ3 பங்கு அங்கத்தவர்கள் மாற்றத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மாற்றலாம்.

Stk. 2. யாப்பு மாற்றமானது அம் மாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுக் கூட்டத்திலிருந்து செல்லுபடியாகும்.