Menu Close

தமிழர்மனையின் போத்தல் சேகரிக்கும் நாள்?

தமிழர்மனையின் போத்தல் சேகரிக்கும் நாள் என்றால் என்ன?

எமது நாட்டில் தமிழர்மனையின் சேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாம் புதிய நிதி திரட்டும் வாய்ப்புகளை கையாள முன் வந்துள்ளோம். அந்த வகையில் ஒரு புதிய சிந்தனையாக ”தமிழர்மனையின் போத்தல் சேகரிக்கும் நாள்” அமைந்துள்ளது.

டென்மார்க்கில் குடி வகைகளுக்கு பாவிக்கப்பட்ட வெறுமையான போத்தல்களை மறுசுழற்சிக்காக கடைகளில் கொடுத்தால் 1-3 டேனிஷ் க்ரோனரை பெற்றுக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழர்மனையின் போத்தல் சேகரிக்கும் நாள் 14 ஆம் திகதி அக்டோபர் 2018 டென்மார்க் உறுப்பினர்கள் கவிஸ்கர் பத்திநாதன் மற்றும் ஸ்ரீராஜன் சுகதேவன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.

போத்தல் சேகரிக்கும் நாளின் முக்கியத்துவம் என்ன?

போத்தல் சேகரிக்கும் நாள் முடிவில் 500 டேனிஷ் க்ரோனரை திரட்ட வேண்டும் என ஒரு குறிக்கோளை முன் வைத்திருந்தோம். மொத்தம் 5 பெரிய பைகளில் போத்தல்களை எம்மால் சேகரிக்க முடிந்தது, ஆகவே நாம் வைத்த குறிக்கோளுக்கு நிகராக 548 டேனிஷ் க்ரோனரை அன்று எம்மால் திரட்ட முயன்றது.

எமது தாய் நாட்டில் தமிழர்மனையால் நடாத்தப்படும்  ஆய்வு மற்றும் சமூக சேவைகளுக்கு 500 டேனிஷ் க்ரோனர் எவ்வாறு உதவிக்கின்றது என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்க்கலாம் (500 டேனிஷ் க்ரோனர் தற்போது இலங்கையில் கிட்டத்தக்க 12.000 ருபையாக கணக்கிடப்படுகிறது):

தாய்நாட்டில் தமிழர்மனை அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதம் 10.000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆகவே எமது போத்தல் சேகரிக்கும் நாள் ஒரு ஒருங்கிணைப்பாளரின் சம்பளத்தையும் மற்றும் வேறு சேவைகளுக்கு பயன்படுத்த உதவுகின்றது.

Tamilshomes flaskeindsamlingsdag