Menu Close

தமிழர்மனையின் உலக சிறுவர் தினம் 2018

நிகழ்வின் நோக்கம்

சிறுவர்களின் நலமேம்பாடு, உரிமை மற்றும் ஒற்றுமை போன்றவற்றில் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்.

சர்வதேச சிறுவர் தினத்தின் நோக்கம்

உலகளவில் குழந்தை நலத்திட்டத்தை மேம்படுத்துதல், குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துதல், அனைத்து குழந்தைகளிடையில் ஒற்றுமையையும் விழிப்புணர்வினை மேம்படுத்துதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச சிறுவர் தினம் 2018 இன் கருப்பொருள்

“இன்றைய குழந்தைகள் நாளை எம்மை காப்பவர்கள்”

“Children’s of today our keeper tomorrow on International Children’s Day – 2018”

தமிழர்மனையின் உலக சிறுவர் தினம் 2018

விடயங்கள்

கரணவாய் கிழக்கில் உள்ள தமிழர்மனை அலுவலகத்தில் 07.10.2018 அன்று இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தினத்தில் சிறப்பு விருந்தினர்களான யா/கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலய சிறுவர்கள் தமது பொறுப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் காலை 8மணி தொடக்கம் காலை 8.30 மணி வரை வருகை தந்து தமது பதிவுகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் வயது அடிப்படையில் தமிழர் மனையின் உறுப்பினர்களால் நிற அடையாளப் பட்டி வழங்கப்பட்டது.

சரியாக காலை 9.30 மணியளவில் பிரதமவிருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு விழா மண்டபத்தினுள் அழைத்து வரப்பட்டனர். அதன் பின்னர் மங்கள விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்றது. முதலாவது சுடரினை பிரதம விருந்தினர் திருமதி சிந்தூரா கலியுகவரதன் (சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்) ஏற்றி வைத்தார். அடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் சார்பாக தரம் 05 மாணவி சுடரினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொறுப்பாசிரியர்களாக கடமை ஏற்ற திருமதி. இராசலிங்கம் கனகாம்பிகை மற்றும் திருமதி. உமாகரன் காயத்திரி ஆகியவர்களால் சுடரானது ஏற்றி வைக்கப்பட்டது. இறுதிச் சுடரானது பெற்றோர் சார்பில் ஒருவரால் ஏற்றி வைக்கப்பட்டது. அடுத்த நிகழ்வாக செல்வி. உ.அக்சனா, செல்வி. அ. வர்ஷா, செல்வி. சு. ரக்ஷியா, செல்வி. ஜெ. யஸ்மிகா, செல்வி. தெ. பிரார்த்தனா போன்ற மாணவிகளால் இறைவணக்கம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை தமிழர்மனை ஒருங்கிணைப்பாளர் செல்வி. தமிழினி அருமைராசா அவர்களால் வழங்கப்பட்டது.தமிழர்மனையின் உலக சிறுவர் தினம் 2018

அடுத்த நிகழ்வாக கலைநிகழ்வுகள் ஆரம்பமானது. அந்த வகையில் தரம் 01 மற்றும் தரம் 02 மாணவர்களினால் அபிநயப்பாடலுக்கான அசைவு வழங்கப்பட்டது. தொடர்ந்து தரம் 03 மற்றும் தரம் 04 மாணவர்களினால் English song இசைக்கப்பட்டது. இறுதி கலைநிகழ்வாக தரம் 05 மாணவர்களினால் “உயிரை நேசி” என்ற உரையாடல் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து பிரதம விருந்தினர் உரை திருமதி சிந்தூரா கலியுகவரதன் (சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்) அவர்களினால் வழங்கப்பட்டது. அவர் குறிப்பிடுகையில, சிறுவர்தின வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் சர்வ தேச சிறுவர் தினத்தின் வரலாறு பற்றியும் இலங்கையில் உள்ள சிறுவர் தொடர்பிலான உறுப்புரைகள் பற்றியும் கூறினார். மேலும் இவர் சிறுவர்கள் அனைவரும் நன்றாக கல்வி கற்று எமது பிரதேசத்தில் நன்மதிப்பு பெற வேண்டும் என்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பினை தம்மால் வழங்க முடியும் என்றும் கூறினார். அத்துடன் சிறுவர்தின நிகழ்வினை ஒழுங்கமைத்த தமிழர்மனை உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறினார். மேலும் இந் நிகழ்விற்கு ஆர்வமுடன் அழைத்து வந்ந பெற்றோர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். 15 நிமிட சிறிய இடைவேளையின் பின்னர் புத்துணர்வூட்டும் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.தமிழர்மனையின் உலக சிறுவர் தினம் 2018

முதலாவதாக 6 – 7 வயதுப்பிரிவு சிறுவர்களுக்கான விளையாட்டு 01 விழுந்தாப்போச்சு விழா மண்டபத்தினுள் நடாத்தப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு 06 நண்பன் காலில life 10 வயதுப்பிரிவினர்களிற்கு விழா மண்டபத்திற்கு முன்பாக உள்ள வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழர்மனை அலுவலக முன்றலில் 6 – 7 வயதுப்பிரிவினர்களுக்கான விளையாட்டு 02 மோதி விளையாடு மற்றும் 8 – 9 வயதுப்பிரிவினர்களிற்கான விளையாட்டு 04 அது இது எது ஆகிய விளையாட்டுக்கள் இடம்பெற்றன. தொடர்ந்து தமிழர்மனை அலுவலக பலா மர நிழலில் விளையாட்டு 05 அச்சம் தவிர் 10 வயதுப்பிரிவினருக்கும் மற்றும் விளையாட்டு 03 நெருப்புடா 8 – 9 வயதுப்பிரிவினர்களிற்கும் நடாத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட சிறுவர்கள் தமது பயம் கலந்த சந்தோசத்துடன் சமநிலை, ஒற்றுமை, வேகம், விவேகம், ஆர்வம் மற்றும் விட்டுக்கொடுப்பு போன்றவற்றினை சுறுசுறுப்பாக வெளிப்படுத்தி போட்டியில் ஈடுபட்டனர். இங்கு வெற்றி, தோல்வி சமனான வகையில் சிறுவர்களிற்கான பரிசில்கள் வழங்கப்பட்டது. இந்த பரிசில் வழங்கலானது தமிழர்மனை உறுப்பினர்கள் மற்றும் யா/கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலய பொறுப்பாசிரியர்கள் ஆகியவர்களால் வழங்கப்பட்டது. தொடர்ந்து நன்றியுரையினை இன்றைய நிகழ்வின் தொகுப்பாளர் செல்வி. நிவேதிக்கா குணசேகரன் (தமிழர்மனை ஒருங்கிணைப்பாளர்) அவர்களினால் வழங்கப்பட்டது. அதன் பின்னர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த சிறுவர்களில் ஒருவரான செல்வி. து. கன்சியா அவர்கள் தமது பிறந்த தினத்தினை விழாவிற்கு வந்த அனைவருடனும் சிறப்பாக கொண்டாடினார். விழாவின் இறுதியில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டதன் பின்னர் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சந்தோசத்தின் வெளிப்பாடாக இசைவிற்கான அசைவினை அழகாக வழங்கி நன்றியைத் தெரிவித்ததுடன் சரியாக மதியம் 12.30 மணியளவில் விழாவானது நிறைவு பெற்றது.

தமிழர்மனை ஒருங்கிணைப்பாளர்கள்
செல்வி. நிவேதிக்கா குணசேகரன் செல்வி. தமிழினி அருமைராசாதமிழர்மனையின் உலக சிறுவர் தினம் 2018