Menu Close

சீதனம் என்பது ஏன் இன்றும் தமிழ் சமூகத்தில் ஒரு பிரச்சனையாக உள்ளது?

சீதனம் என்பது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்ல புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இன்றும் கொடுக்கவும் வேண்டவும் படுகிறது. ஆரம்பக் காலங்களில் பெண்கள் பெரிதும் கல்விகற்கவில்லை, வேலைக்குச் செல்லவில்லை போன்ற காரணங்களால் சீதனம் வழக்கத்தில் இருந்தது. ஆனால் இன்று பெண்கள் கல்வியிலும் சரி, வேலையிலும் சரி ஆண்களுக்குச் சமமாக பங்குகொள்கிறார்கள். இந் நிலையில் ஏன் இன்றும் சீதனம் என்ற ஒன்று முற்றாக அழிக்கப்படாமல் உள்ளது? ஏன் இன்றும் பல பெண்கள் இதனால் கொடுமையை அனுபவிக்கிறார்கள்? பெண்களைப் பெற்ற பெற்றோர் ஏன் இன்றும் இதனால் கடனாளிகள் ஆகிறார்கள்? இவ்வாறறான பல கேள்விகள் பலர் மனதில் இருக்கும். அதில் சில கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதுதான் இக் காணொளியின் நோக்கமாகும்.