Menu Close

எல்லைப்படுத்தப்பட்ட சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற சமூக உளச் சவால்கள்

ஆய்வுப் பிரதேசம்

வடமராட்சி தெற்கு மேற்குப் பிரதேசசெயலகத்திற்குட்பட்ட 35 கிராம செயலகர் பிரிவினைக் கொண்ட பிரதேசமானது ஆய்வுப் பிரதேசமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் 14,733 குடும்பங்களும், 21,857 ஆண்களும் 23,724 பெண்களும் என மொத்தமாக 45,581 மக்கள் வாழ்கின்றனர். இதிலுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 11,772 (கரவெட்டிப் பிரதேச புள்ளி அறிக்கை 2017)

ஆய்வின் நோக்கங்கள்

பொது நோக்கம்

எல்லைப்படுத்தப்பட்ட சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற சமூக உளச் சவால்களினை மதிப்பிடுதல்.
சிறப்பு நோக்கங்கள்

  1. எல்லைப்படுத்தப்பட்ட சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற சமூக சவால்களை மதிப்பிடுதல்.
  2. எல்லைப்படுத்தப்பட்ட சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற உளச் சவால்களை மதிப்பிடுதல்.
  3. எல்லைப்படுத்தப்பட்ட சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற சமூக, உளச் சவால்களில் சூழல்எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என மதிப்பிடுதல்.
  4. எல்லைப்படுத்தப்பட்ட சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற சமூக, உளச் சவால்களில் குடும்பத்தின் பொருளாதாரம் அவர்களில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என மதிப்பிடுதல்.
  5. எல்லைப்படுத்தப்பட்ட சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற சமூக, உளச் சவால்களில்அரசாங்கத்தின் செல்வாக்கினை மதிப்பிடுதல்.

ஆய்வு வினாக்கள்

  1. எல்லைப்படுத்தப்பட்ட சிறுவர்களில் செல்வாக்குச் செலுத்தும் சமூக காரணிகள் எவை?
  2. எல்லைப்படுத்தப்பட்ட சிறுவர்களில் செல்வாக்குச் செலுத்தும் உளச் காரணிகள் எவை?
  3. எல்லைப்படுத்தப்பட்ட சிறுவர்களரின் சமூக, உளச் சவால்களை தீர்ப்பதற்கானதீர்வுப்பொறிமுறைகள் எவை?