Menu Close

எம்மை பற்றி

தமிழர் மனை ஓர் அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். தமிழர் மனையின் நோக்கமானது உலகெங்கும் வாழும் தமிழர்கள் தொடர்பிலும் அவர்கள் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகள் பற்றியும் ஆய்வுகளை நடத்துவதாகும். அத்தோடு சமூக சேவைகளிலும் தமிழர் மனையின் ஈடுபாடு இருக்கும்.

நோக்கம்

  • உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்களின் சமூகப் பிரச்சினைகளைத் தடுத்தல்.
  • இலக்குக் குழுவினரின் சமூகப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான ஆய்வுகள் மற்றும் சமூக சேவைகளை முன்னெடுத்தல்.

இலக்கு

தமிழர் மனையின் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைப்பின் சேவை மூலம் எட்ட விரும்பும் இலக்குகள்:

ஆய்வு

  • தாய் நாட்டில் (இலங்கை) உள்ள சமூகப் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகள்
  • புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள சமூகப் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகள்

சமூக சேவை

  • தாய் நாட்டிலும் புலம்பெயர் தேசத்திலும் வாழும் தமிழர்களுக்கான தன்னார்வ சமூக சேவைகளைச் செய்தல்.
  • நியாயமான வாழ்வு தொடர்பான கல்வி. இலக்கு குழு நியாயமான ஓர் எதிர்காலத்தை அமைப்பதற்கான கல்வி.

ஆய்வு மற்றும் தன்னார்வ சமூக சேவை

தமிழர் மனையால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளும் தன்னார்வ சமூக சேவைகளும் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். அதாவது தமிழர் மனையால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் அதிகமானவை சமூக சேவைக்கு தொடர்ந்து வழிவகுக்க வேண்டும்.